வெலிசர கொரோனா சிப்பாயுடன் தொடர்பு!! -முல்லைத்தீவில் 54 படையினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை- - Yarl Thinakkural

வெலிசர கொரோனா சிப்பாயுடன் தொடர்பு!! -முல்லைத்தீவில் 54 படையினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை-

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 55 பேருடைய மாதிரிகள் இன்று கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதணைக்காக யாழ்.மருத்துவபீட ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதணைகளின் முடிவுகளின்படி அதில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்தார்.

வெலிசர கடற்படை முகாமினைச்சேர்ந்த சிப்பாய் ஒருவர் கடந்த 26 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. குறித்த சிப்பாயுடன் சேர்ந்த பேருந்தில் பயணம் செய்த முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள படைமுகாங்களில் கடமையாற்றும் படையினர் புதுமாத்தளன் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் 54 படையினருடைய இரத்த மாதிரிகள் மற்றுமு; வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் உள்ள ஒருவருடையதுமாக மொத்தம் 55 பேருடைய இரத்த மாதிரிகள் பரிசோதணைக்காக அனுப்பிவைக்கப்பட்டடிருந்தன.

அவை பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டு நேற்று இரவு முடிவுகள் வெளியாகியிருந்தன. இதன்படி அதில் எவருக்கும் கொரேர்னா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்தார்.
Previous Post Next Post