வடக்கில் 53 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -எவருக்கும் தொற்றில்லை- - Yarl Thinakkural

வடக்கில் 53 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -எவருக்கும் தொற்றில்லை-

வடக்கின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 53 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகூட பரிசோதணை நடத்தப்பட்டது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அவர்களில் எவருக்கும் தொற்று இல்லை என்பது பரிசோதணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் 10 பேர், வைத்தியசாலை வெளிநோயாளர்  பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் 5  பேர், வவுனியா பொது வைத்தியசாலை 7 பேர், கிளிநொச்சி பொது வைத்தியசாலை ஒருவர், முல்லைத்தீவு பொது வைத்தியசாலை ஒருவர், மன்னார் மாவட்டம் 29 பேர் ஆயோருக்கே மேற்படி பரிசோதணை நடத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

Previous Post Next Post