கொழும்பு போய் வந்த 53 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -ரிப்போட் வெளியாவதில் தாமதம்- - Yarl Thinakkural

கொழும்பு போய் வந்த 53 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -ரிப்போட் வெளியாவதில் தாமதம்-

யாழ்ப்பாணம் - கொழும்பு மாவட்டங்களுக்கு இடையிலான அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி இறக்கலில் ஈடுபட்டவர்கள் உட்பட 53 பேருக்கு இன்று திங்கட்கிழமை கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதணைக்கு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவர கொழும்பு சென்று வாகன சாரதிகள், உதவியாளர்களே இப் பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை அவர்கள் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு வரவளைக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து குருதி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட மாதிரிகள் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள பி.சி.ஆர் ஆய்வுகூடத்திற்கு கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதணைக்காக அனுப்பிவைக்கப்பட்டன.

இவ்விடயம் தொடர்பில் யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது:-

இன்று 50 ற்கும் மேற்பட்டவர்களின் மாதிரிகள் சேரிக்கப்பட்டு மருத்துவபீட ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு மாவட்டத்திற்கு பொருட்களை ஏற்றிவரச் சென்று வந்த வாகன சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்டவர்களின் மாதிரிகளே இன்று பரிசோதணைக்காக சேரிக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் குறித்த பரிசோதணைகளின் முடிவுகள் நாளை வெளியாகும் என்றார்.
Previous Post Next Post