கொழும்பு சென்று வந்த 53 பேர் உட்பட வடக்கில் 78 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -எவருக்கும் தொற்றில்லை- - Yarl Thinakkural

கொழும்பு சென்று வந்த 53 பேர் உட்பட வடக்கில் 78 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -எவருக்கும் தொற்றில்லை-

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்றும், இன்றுமாக கடந்த 2 நாட்களில் 78 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதணை நடத்தப்பட்டது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அதில் எவருக்கும் தொற்று இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது என்றும் பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட 7 பேர், போதனா வைத்தியசாலை வெளிநோயாளர்  பிரிவில் சிகிச்சை பெற்ற 14 பேர், வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து 4 பேர், யாழ் மாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு பார ஊர்திகளில் அடிக்கடி சென்று வந்தவர்கள் (சாரதி மற்றும் உதவியாளர்) 30 பேர், வவுனியா மாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு பார ஊர்திகளில் அடிக்கடி சென்று வந்தவர்கள் (சாரதி மற்றும் உதவியாளர்) 10 பேர், மன்னார் மாவட்டத்திற்கு கொழும்பிலிருந்து கடமையின் நிமித்தம் வந்தவர்கள் 13 பேர் ஆகியோருக்கே பரிசோதணை நடத்தப்பட்டது என்றும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post