அமெரிக்காவை திணறவைக்கும் கொரோனா!! -பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது- - Yarl Thinakkural

அமெரிக்காவை திணறவைக்கும் கொரோனா!! -பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது-

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் பரவியவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 8 இலட்சத்து 86 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இதுவரை 85 ஆயிரத்து 922 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 50 ஆயிரத்து 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனாவுக்கு அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Previous Post Next Post