யாழில் 50 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -எவருக்கும் தொற்றில்லை- - Yarl Thinakkural

யாழில் 50 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -எவருக்கும் தொற்றில்லை-

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்றும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ பரிசோதணை நடத்தப்பட்டது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வடக்கின் 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நடத்தப்பட்ட இப் பரிசோதணையில் எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகூட பரிசோதணைக்காக யாழ்.மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 30 பேர் மற்றும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்குமாக 33 பேருடைய இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பீட ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் சுவிஸ் மத போதகர் யாழ் அரியாலையில் நடத்திய ஆராதணையில் கலந்து கொண்ட நிலையில் கிளிநொச்சியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த  11 பேருக்கும் இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்த நிலையில் கிளிநெச்சியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 5 பேருக்குமாக கிளநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 16 பேருடைய மாதிரிகளும் ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருடைய மாதிரியும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள மருத்துவ ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

குறித்த மாதிரிகள் பிசிஆர் பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டது. அப் பரிசோதணைகளின் முடிவுகளின்படி அதில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post