ஊடரங்கை மீறிய 50 பேர் கைது!! -கோப்பாய் பொலிஸ் அதிரடி- - Yarl Thinakkural

ஊடரங்கை மீறிய 50 பேர் கைது!! -கோப்பாய் பொலிஸ் அதிரடி-

கோப்பாய் பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடினர் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் உரிய அனுமதி இன்றி ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் பொலிஸார் மேலு; தெரிவித்தனர்.

Previous Post Next Post