நாட்டில் மற்றுமொரு கொரோனா உயிரிழப்பு!! -பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது- - Yarl Thinakkural

நாட்டில் மற்றுமொரு கொரோனா உயிரிழப்பு!! -பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது-

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மற்றுமொருவர் இன்று சனிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்துள்ளார்.

அதன்படி கொரோனா எனப்படும் கொவிட் 19 தொற்றால் இதுவரை இலங்கையில் பதிவான 5 ஆவது மரணமாக இது அமைந்துள்ளது.

இத்தாலியில் இருந்து இலங்கை திரும்பிய 44 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இதுவரை 159 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஐவர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 24 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post