இன்று மட்டும் 48 பேருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

இன்று மட்டும் 48 பேருக்கு கொரோனா!!

சற்று முன் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 416 ஆக அதிகரித்துள்ளது.

வெலிசர கடற்படை முகாமில் 35 கடற்படை சிப்பாய்களுக்கும், கொழும்பு 12 இல் 4 பேருக்கும் ஏனைய பகுதிகளில் 7 பேருக்கும் மொத்தமாக 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே 415 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post