கொரோனாவா? -யாழில் இன்றும் 44 பேருக்கு பரிசோதணை- - Yarl Thinakkural

கொரோனாவா? -யாழில் இன்றும் 44 பேருக்கு பரிசோதணை-

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த 44 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பிலான பி.சி.ஆர் பரிசோதணை நடத்தப்பட்டது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இப்பரிசோதணைகளின் முடிவின்படி எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேர், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழு; உள்ள 39 பேர் மற்றும் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருமாக 44 பேருடைய இரத்த மாதிரிகள் நேற்று சேகரிக்கப்பட்டன.

இவ்வாறு சேரிக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டடது.

அங்கு நடைபெற்ற பி.சி.ஆர் பரிசோதணைகளின் முடிவுகள் மாலை கிடைக்கப்பெற்றது. அந்த பரிசோதணை முடிவுகளின்படி எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Previous Post Next Post