யாழில் 4 பேருக்கு கொரோனா!! -சுவிஸ் போதகருடன் நெருங்கிய தொடர்பே காரணம்- - Yarl Thinakkural

யாழில் 4 பேருக்கு கொரோனா!! -சுவிஸ் போதகருடன் நெருங்கிய தொடர்பே காரணம்-

சுவிஸ் மத போதகரால் யாழ்ப்பாணத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் போதகர் அரியாலை தேவாலயத்தில் போதனை நடத்தியதுடன், யாழில் பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்திருந்தார்.+

இந்நிலையில் அவருடன் பழங்கிய தாவடி பகுதியை சேர்ந்த நபர் யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனோ நோயாளியாக அடையாளம் காணப்பட்டார்.

இதனையடுத்து சுவிஸ் மத போதகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 20 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக பலாலி படைமுகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உற்றமை நேற்று நடந்த மருத்துவ பரிசோதணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post