கொரோனாவா? -இன்றும் 3 பேர் வைத்திய சாலையில் அனுமதி- - Yarl Thinakkural

கொரோனாவா? -இன்றும் 3 பேர் வைத்திய சாலையில் அனுமதி-

கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலையில் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் இதுவரையில் 71 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறிப்பாக கடந்த 2 நாட்களில் 5 பேர் குறித்த காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் நேற்று அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான பரிசோதணை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் இன்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்ட 3 பேருடைய இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மருத்துவ ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஆய்வுகூடத்தின் பரிசோதணை முடிவுகளுக்காக காத்திருக்கின்றோம் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post