பொலிஸ் மறித்தும் நிறுத்தாமல் சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு!! -3 பேர் காயம்- - Yarl Thinakkural

பொலிஸ் மறித்தும் நிறுத்தாமல் சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு!! -3 பேர் காயம்-

ஊரடங்குச் சட்டம்  அமுலில் உள்ள போது பொலிஸாரின் சைகையை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

மொரட்டுவை - எகொட உயன பகுதியில் நடந்த இச் சம்பவத்தில் குறித்த காரில் பயணித்த 3 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்ககா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த காரில் 4 பேர் பயணித்த போதிலும் மூவர் காயமடைந்துள்ளதுடன் அக்காரில் பயணித்த நால்வரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post