3 மாத விடுமுறை கோரும் வடக்கு ஆளுநர்!! - Yarl Thinakkural

3 மாத விடுமுறை கோரும் வடக்கு ஆளுநர்!!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் நாளை முதலம் திகதி முதல் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மருத்துவ விடுமுறையை ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விடுமுறைக் காலங்களில் தனது நிர்வாக நடவடிக்கைகளை வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் முன்னெடுக்க அனுமதி வழங்குமாறும் அவர் தனது கடிதத்தில் மேலும் கோரியுள்ளார்.

இந்த நிலையில் வேறு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண பதில் ஆளுநராக 3 மாதங்களுக்கு நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post