கொரோனாவா? யாழில் இன்றும் 34 பேருக்கு பரிசோதணை!! -ஒருவருக்கும் தொற்றில்லை- - Yarl Thinakkural

கொரோனாவா? யாழில் இன்றும் 34 பேருக்கு பரிசோதணை!! -ஒருவருக்கும் தொற்றில்லை-

யாழில் இன்றும் 34 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதணை நடத்தப்பட்டது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இந்த பரிசோதணைகளின் முடிவில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 24 பேருக்கும் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்குமே நேற்று பரிசோதணை நடத்தப்பட்டது.

இதில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த - 3 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை - 2 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 10 பேர். சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - ஒருவர்,  கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 6 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 2 பேர். வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 10 பேர் என மொத்தமாக 34 பேருக்கே இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்து என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post