கொரோனா அச்சம்!! -யாழ் சிறையில் இருந்து 325 கைதிகள் விடுதலை- - Yarl Thinakkural

கொரோனா அச்சம்!! -யாழ் சிறையில் இருந்து 325 கைதிகள் விடுதலை-

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக யாழ் சிறைச்சாலையில் இருந்து இன்றுவரை 325 கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைச்சாலை திணைக்களம் ஜனாதிபதியுடன் இணைந்து சிறைகளில் உள்ள கைதிகளை நீதிமன்றங்களின் ஊடாக பிணையில் விடுதலை செய்துவருகின்ரது.

சிறைச்சாலைக்குள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கட்டம் கட்டமாக கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்றுவரை 325 கைதிகள் நீதிமன்றங்கள் ஊடாக பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் சில கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.விடுதலை செய்யப்படும் கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளின் பொலிஸ் பிரிவுகளில் உறவினர்களை அழைத்து அவர்களின் உறவினர்களிடம் நேரடியாக கையளிக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post