யாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -17 பேருக்கு இல்லை: 18 பேருடைய முடிவு கிடைக்கவில்லை- - Yarl Thinakkural

யாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -17 பேருக்கு இல்லை: 18 பேருடைய முடிவு கிடைக்கவில்லை-

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் 32 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதணையில் 17 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

மேலும் 18 பேருடைய பரிசோதணை முடிவுகள் இன்னும் சில மணித்தியாலங்களில் வெளியிடப்படும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர் என்று மருத்துவ பரிசோதணையில் உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 32 பேர் முதல்கட்டமாக கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான மருத்துவ பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களின் யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள பகுதிகளான மானிப்பாய் பகுதியினைச் சேர்ந்த 8 பேரும், அரியாலைப் பகுதியில் 6 பேரும், யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேருமாக 17 பேருடைய பரிசோதணை முடிவுகள் இன்;று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் கிடைத்தது. இதன்படி அந்த 17 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தாவடிப் பகுதியில் உள்ள 18 பேருடைய இரத்த மாதிரிகள் பரிசோதணைக்காக நேற்று பெறப்பட்டிருந்தது.

அந்த பரிசோதணை அறிக்கைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post