சண்டிலிப்பாயில் 30 பவுண் நகை கொள்ளை!! -பெண் கைது: அடகு வைத்த நகை மீட்பு- - Yarl Thinakkural

சண்டிலிப்பாயில் 30 பவுண் நகை கொள்ளை!! -பெண் கைது: அடகு வைத்த நகை மீட்பு-

சண்டிலிப்பாய் பகுதியில் வீடு புகுந்து 30 பவுண் நகை மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொள்ளையடித்த பெண் ஒருவர் 9 மாதங்களின் பின் கைது செய்யததுடுன், அடகு வைத்த நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சண்டிலிப்பாள் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்து தங்கியிருந்தவர்களிடம் 30 பவுண் நகை மற்றும்வெளிநாட்டு நாணயத்தாள்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த பொலிஸார் கொள்ளையர்களை தேடி வலைவிரித்திருந்தனர்.

மிக நீண்ட நாட்களாக விசாரணையை நடத்திவந்த பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் சங்கானை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடை பெண் ஒருவரை கைது செய்து விசாதணை நடத்தினர்.

இதன் போது அவர் குறித்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. மேலும் திருநெல்வேலியில் உள்ள நகை கடை ஒன்றில் அடகுவைத்த நிலையில் இரு சோடி காப்பினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
Previous Post Next Post