மேலும் 3 பேருக்கு கொரோனா: இன்று மட்டும் 7 பேர் அனுமதி!! -மொத்த எண்ணிக்கை 217 ஆக உயர்வு- - Yarl Thinakkural

மேலும் 3 பேருக்கு கொரோனா: இன்று மட்டும் 7 பேர் அனுமதி!! -மொத்த எண்ணிக்கை 217 ஆக உயர்வு-

நாட்டில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை புதுவருடத்தில் மட்டும் 7 கொரோனா நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் தொகை 217 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 154 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 117 பேர் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் இதுவரை 56 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தாக்கத்திற்குள்ளான 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post