3 பெண்கள் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா!! -இன்று அடையாளம் காணப்பட்டனர்- - Yarl Thinakkural

3 பெண்கள் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா!! -இன்று அடையாளம் காணப்பட்டனர்-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 3 பெண்கள் உட்பட 4 பேர் இன்று வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சற்று முன்னர் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் 3 பெண்களுக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று காணப்படுவது உறுதி செய்யப்பட்டது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 77 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post