யாழின் 2வது கொரோனா நோயாளி வெலிகந்தவுக்கு அனுப்பிவைப்பு!! - Yarl Thinakkural

யாழின் 2வது கொரோனா நோயாளி வெலிகந்தவுக்கு அனுப்பிவைப்பு!!

யாழில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் இன்று புதன்கிழமை அடையாளம் காணப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக வெலிகந்த வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளார் என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

சுவிஸ் போதகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 20 பேர் பலாலி படைமுகாமில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு மேலாக அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு முதற்கட்டமாக இன்று பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர் இன்று இரவே வெலிகந்த வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்படுவார் என்று பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post