ஊடரங்கை மீறினால் 2 வாரம் தனிமைப்படுத்தல் முகாமிற்கு!! -பொலிஸ் அதிரடி அறிவிப்பு- - Yarl Thinakkural

ஊடரங்கை மீறினால் 2 வாரம் தனிமைப்படுத்தல் முகாமிற்கு!! -பொலிஸ் அதிரடி அறிவிப்பு-

ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்கள் இரண்டு வாரங்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் முகாங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று பொலிஸ் எச்சரிகை செய்துள்ளது.

இன்று வியாழக்கிழமை மேற்படி எச்சரிக்கையினை விடுத்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நாளை வெள்ளிக்கிழமை முதல் இது நாட்டின் சகல பகுதிகளிலும் நடமுறைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார்.

நாட்டில் ஊடரங்கு அமுலில் உள்ள நிலையிலும், தேவையற்ற விதத்தில் வெளியில் அலைந்து திரிபவர்கள் ஏராளமாக கைது செய்யப்படுகின்றார்கள். இவர்களுடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இருப்பினும் கைது செய்யப்படுபவர்களுடைய தொகை குறைவடையவில்லை. இந்நிலையில் ஊடரங்கின் போது கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post