சுவிஸ் போதகரே கொரோனா நோய் காவி!! -யாழின் 2வது நோயாளியால் உறுதியானது- - Yarl Thinakkural

சுவிஸ் போதகரே கொரோனா நோய் காவி!! -யாழின் 2வது நோயாளியால் உறுதியானது-

யாழ்ப்பாணத்திற்கு கொரோனா வைரஸ் நோய் காவியாக சுவிஸ் நாட்டு மத போதகரே இருந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று யாழில் இரண்டாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட சம்பவத்தின் பின்பே மேற்படி தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி வெளிநாடு சென்று வந்தவர் என்றும், சுவிஸ் மத போதகர் இலங்கை கட்டநாயக்க விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதணை மேற்கொண்டு அங்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையுடனே யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால் சுவிஸ் மத போதகரால் யாழ்ப்பாணத்திற்கு கொரோனா வைரஸ் பரவவில்லை என்றும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த சுவிஸ்நாட்டு மத போதகரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்த யாழ்.மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மத போதகர் இன்று கொரோன தொற்றுக் இலக்கான நிலையில் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கு சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகரே கொரோனா வைரஸ் காவியாக இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post