கொரோனா தொற்று அச்சம்!! -பேருவளையில் 2 கிராமங்கள் இராணுவ முற்றுகைக்குள்- - Yarl Thinakkural

கொரோனா தொற்று அச்சம்!! -பேருவளையில் 2 கிராமங்கள் இராணுவ முற்றுகைக்குள்-

கொரோனா பரவும் அபாயம் காரணமாக பேருவளை, பன்வில மற்றும் சீனக்கொரோட்டுவ கிராமம் ஆகியவை முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நேற்று கொரோனா தொற்றாளர்கள் குறித்த பகுதிகளில் இருந்து அடையாளம் காணப்பட்டத்தை அடுத்தே குறித்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

புதிதாக அடையாளம் காணப்பட்ட அனைவரும் மட்டக்களப்பு, புனாணையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்திலிருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பேருவளைப் பகுதியில் இருந்து 219 பேர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு சொல்லப்பட்டனர், அவர்களுக்கு கடந்தப்பட்ட ஆய்வுகூட பரிசோதணையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனாலேயே பேருவளை பகுதியில் உள்ள பன்வில மற்றும் சீனக்கொரோட்டுவ கிராமம் ஆகியவற்றை முற்றாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post