ஊரடங்கிலும் வீடுடைத்து துணிகர கொள்ளை!! -சாவகச்சேரியில் அதிகாலை 2 மணிக்கு சம்பவம்- - Yarl Thinakkural

ஊரடங்கிலும் வீடுடைத்து துணிகர கொள்ளை!! -சாவகச்சேரியில் அதிகாலை 2 மணிக்கு சம்பவம்-

ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலும் வீடு புகுந்து கொள்ளையிட்ட  சம்பவம் யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி மண்டுவில் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையர்கள் வயோதிபர்களான கணவன்- மனைவியை தாக்கி அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றைக் கொள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த வயோதிபர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிகாரிகளிடம் விசாரணைகள் சாவகச்சேரி போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post