கொரோனாவா? -யாழில் இன்றும் 29 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதணை- - Yarl Thinakkural

கொரோனாவா? -யாழில் இன்றும் 29 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதணை-

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 29 பேருக்கு இன்று ஆய்வுகூட பரிசோதணை நடத்தப்பட்டது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அப்பரிசோதணைகளின் முடிவுகளின்படி அதில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படத்தப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேருக்கும், வெளிநோயாளர் பரிவிற்கு வந்த பேருக்கும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட பேருக்கும், யாழ்.மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பேருக்கும் நேற்று பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி அவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோதணைக்காக யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைப்பட்டது.

குறித்த பரிசோதணைகளின் முடிவுகள் நேற்று மாலை கிடைக்கப்பெற்றது. அதன்படி மேற்படி பரிசோதணை செய்த எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்து என்று பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்தார்.
Previous Post Next Post