28.04 2020 கை மீறிச் செல்லும் கொரோனா தாக்கம் -அடுத்துவரும் ஆபத்தான நாட்கள்- - Yarl Thinakkural

28.04 2020 கை மீறிச் செல்லும் கொரோனா தாக்கம் -அடுத்துவரும் ஆபத்தான நாட்கள்-

28.04 2020 கை மீறிச் செல்லும் கொரோனா தாக்கம் -அடுத்துவரும் ஆபத்தான நாட்கள்-
28.04 2020 கை மீறிச் செல்லும் கொரோனா தாக்கம் -அடுத்துவரும் ஆபத்தான நாட்கள்-
இலங்கையில் கொரோனாவின் தாக்கம் அனைத்து மாவட்டங்களையும் ஆக்கிரமித்து வரும் நிலையில் 600 ஐ அண்மித்து மிரட்டுகிறது தொற்றாளர் தொகை.
வெறும் இரண்டு நாட்களில் 100 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை கொரோனாவின் தாக்கம் கைமீறிச் செல்வதையே எடுத்துக்காட்டுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் மருத்துவமனைகளை அடையாளம் காணுமாறு சுகாதார அமைச்சு அவசர பணிப்புரையை விடுத்துள்ளமை நோக்கப்படவேண்டியது.

இந்தவகையில் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இதற்குரிய மருத்துவமனைகளை அடையாளம் காணுமாறு அந்தந்த மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
அதற்கப்பால் பல பாடசாலைகளும் வடக்கில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக பெற்றுக்கொள்ளும் நிலையில் கொரோனாவின் தாக்கம் அடுத்துவரும் வராங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகின்றது.

இலங்கையில் 21 மாவட்டங்களில் கொரோனா தொற்று பதிவாகியிருக்கின்றமை எதிர்காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

இவற்றிலிருந்து மக்களை பாதுகாக்க ஊரடங்கு, சமூக முடக்கல்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்துக்கு அழுத்தியுரைத்திருக்கின்றது.

இலங்கையை பொறுத்தவரையில் தற்போதய நிலையில் கொரோனாவின் தாக்கம் வலுப்பெற்று வருகின்ற நிலையில் மக்கள் கொரோனா தொற்றிலிருந்து வரும் முன் காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
அசட்டையீனமாக மக்கள் இனிவரும் காலங்களில் தேவையற்ற விதத்தில் நடமாடுவதை தவிர்க்கவேண்டும். சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணுவதுடன் சமூக இடைவெளிகளை கட்டாயமாக பின்பற்றுவதே கொரோனா தாக்கத்திலிருந்து மக்கள் தம்மை பாதுகாப்பதற்கான வழி. குறிப்பாக சிறுவர்கள், முதியவர்களின் பாதுகாப்பில் அக்கறையோடு இருப்பது அவசியம்.
இதற்கப்பால் மக்கள் மத்தியில் தற்போது முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து சுகாதாரத்துறை முன்னெடுக்க வேண்டும்.
இனிவரும் நாட்களின் ஆபத்தை உணர்ந்து மக்கள் தம்மை தாமே பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே தம்மையும் தமது சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுவதற்கு இருக்கும் ஓரே மார்க்கம்.
ஜெ-ஜெ
Previous Post Next Post