வடக்கினைச் சேர்ந்த 27 பேருக்கு கொரோனா பரிசோதணை!! - Yarl Thinakkural

வடக்கினைச் சேர்ந்த 27 பேருக்கு கொரோனா பரிசோதணை!!

யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனோ தொற்று பரிசோதனைகளில் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மருத்தவ பீடத்தில் 27 பேருக்கு இன்று பரிசோதனைகள் மேற்கொகள்ப்பட்டிருந்த போதும் ஒருவருக்கும் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 4 பேர், வவுனியா பொது வைத்தியசாலையில் 4 பேர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு 10 பேர், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஒருவர், இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையம் 5 பேர், கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையம் 3 பேர் என மொத்தமாக 27 பேருக்கு இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதில் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Previous Post Next Post