யாழ் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கும் இரு நாள் ஊரடங்கு!! -இறுக்கமாக நடமுறைப்படுத்தப்படும்- - Yarl Thinakkural

யாழ் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கும் இரு நாள் ஊரடங்கு!! -இறுக்கமாக நடமுறைப்படுத்தப்படும்-

நாடு முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணிமுதல் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணிவரைக்கும் ஊடரங்கு சட்டம் இறுக்கமான முறையில் அமுலில்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில் ஏனைய மாவட்டங்களுக்கு இன்று இரவு 8 மணி முதல் மீள ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

குறித்த மாட்டங்களில் இன்று இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 5 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.
Previous Post Next Post