24 மணி நேரத்தில் கொரோனாவால் 5 பேர் பலி!! -இந்தியாவில் பாதிப்பு 4421 ஆக உயர்வு- - Yarl Thinakkural

24 மணி நேரத்தில் கொரோனாவால் 5 பேர் பலி!! -இந்தியாவில் பாதிப்பு 4421 ஆக உயர்வு-

இந்தியாவில் உயிர் கொல்லி கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் பலியாகியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று இரவு நிலவரப்படி இந்தியாவில் 4281 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இன்று காலை வெளியிட்ட தகவலின்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. 325 பேர் குணமடைந்துள்ளனர்.

Previous Post Next Post