இந்தியாவில் கொரோனா பலி அதிகரிப்பு!! -24 மணி நேரத்தில் 38 பேர்- - Yarl Thinakkural

இந்தியாவில் கொரோனா பலி அதிகரிப்பு!! -24 மணி நேரத்தில் 38 பேர்-

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 38 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்தள்ளனர். இதன்படி அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 377 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1076 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 377 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1306 பேர் குணமடைந்துள்ளனர்.

Previous Post Next Post