உரும்பிராயில் கசிப்பு உற்பத்தி!! -24 லீற்றருடன் 2 பேர் கைது- - Yarl Thinakkural

உரும்பிராயில் கசிப்பு உற்பத்தி!! -24 லீற்றருடன் 2 பேர் கைது-

யாழ்.உரும்பிராய் கிழக்கு பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 24 லீற்றர் கசிப்பு மற்றும் அதனைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்படதாகப் பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, நாட்டில் அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டதை அடுத்து யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post