கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு!! - Yarl Thinakkural

கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு!!

கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 233 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு நவடிக்கையினை மேற்கொண்டுவரும் அரசாங்கத்தினால் வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு திரும்பிய அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

இதன்படி நாட்டில் சில மாகாணங்களில் உள்ள படைமுகாங்களில் குறித்த தனிமைப்படுத்தல் நிலயங்கள் அமைந்துள்ளன.

இதன்படி வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் இந்த தனிமைப்படுத்தும் நிலையங்கள் அமைந்துள்ளன.
இதிலும் யாழ்.மாவட்டத்தில் கொடிகாமம் மற்றும் பலாலி படைமுகாங்களில் தனிமைப்படுத்தல் நிலையம் உள்ளது.

இதில் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 233 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதணை மேற்கொள்ளப்பட்டதுடன், வீடுகளுக்கு திரும்பும் அவர்களை சமூக இடைவெளி பேனுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post