யாழில் 222 பேருக்கு கொரோனா பரிசோதனை!! -எவருக்கும் தொற்றில்லை- - Yarl Thinakkural

யாழில் 222 பேருக்கு கொரோனா பரிசோதனை!! -எவருக்கும் தொற்றில்லை-

யாழ்.மாவட்டத்தில் இதுவரை 222 பேருக்கு கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனை நடாத்தப்பட்டிருப்பதாக குறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, எவருக்கும் கொரோனா தொற்றில்லை என கூறியுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 81 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 141 பேருக்கும் இதுவரை சோதனை நடாத்தப்பட்டிருக்கின்றது.

இதன்போது எந்தவொரு நோயாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post