22 மணித்தியாலங்களில் 32 பேருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

22 மணித்தியாலங்களில் 32 பேருக்கு கொரோனா!!

கடந்த 22 மணித்தியாலங்களில் மட்டும் 32 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 452ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 118 பேர் பூரண குணமடைந்து தத்தமது வீடு திரும்பியுள்ளனர். மேலும் 327 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post