நாடு முழுவதும் நாளையும் ஊடரங்கு!! -யாழ் உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு 28 திகதி தளர்வு- - Yarl Thinakkural

நாடு முழுவதும் நாளையும் ஊடரங்கு!! -யாழ் உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு 28 திகதி தளர்வு-

நாளை திங்கட்கிழமையும் தொடர்ந்து ஊடரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் இன்று மாலை அறிவித்துள்ளது. 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு நாளைய தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவிருந்த நிலையில்குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறித்த மாவட்டங்களுக்கு நாளை 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் மேலும் அறிவித்துள்ளது. 

Previous Post Next Post