ஜீன் 20 பாராளுமன்ற தேர்தல்!! -ஆணைக்குழு அறிவிப்பு- - Yarl Thinakkural

ஜீன் 20 பாராளுமன்ற தேர்தல்!! -ஆணைக்குழு அறிவிப்பு-

பாராளுமன்ற பொது தேர்தலை எதிர்வரும் ஜீன் மாதம் 20ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சகல கட்சிகளினதும் பொதுச் செயலாளர்களை நாளைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த கலந்துரையாடல் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post Next Post