யாழில் இன்றும் 20 பேருக்கு கொரோனா பரிசோதணை!! - Yarl Thinakkural

யாழில் இன்றும் 20 பேருக்கு கொரோனா பரிசோதணை!!

யாழில் இன்றும் 20 பேருக்கு கொரேனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் மருத்துவ ஆய்வுகூட பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது என்று போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இப் பரிசோதணையின் கொரோனா நோயாளிகள் எவரும் இனங்காணப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பேர் மற்றும் கோப்பாய் பிரதேசத்தில் உள்ள 18 பேருடைய இரத்த மாதிரிகளை கொண்டு, கொரோனா வைரஸ் தொடர்பில் மருத்துவ ஆய்வுகூட பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது.

அப்பரிசோதணையின் போது எவருக்கும் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது என்றுமு; பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்தார்.
Previous Post Next Post