20 மணித்தியாலத்தில் 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!! - Yarl Thinakkural

20 மணித்தியாலத்தில் 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

கடந்த 20 மணித்தியாலங்களில் மட்டும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் தொகை 611 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் குறித்த காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த 8 பேர் முழுமையாக குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பணியகம் மேலும் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை 588 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளகியிருந்தனர். இருப்பினும் இன்று கடந்து சென்ற 20 மணித்தியாலங்களில் மட்டும் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post