கொரோனாவால் 2 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பார்கள்!! -ட்ரம்ப் அதிர்ச்சி தகவல்- - Yarl Thinakkural

கொரோனாவால் 2 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பார்கள்!! -ட்ரம்ப் அதிர்ச்சி தகவல்-

கொரோனா வைரஸ் நோயால்  அமெரிக்காவில் 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கும் சாத்தியம் உள்ளது என்று அந்நாட்டின் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அமெரிக்க ஜனாதிபதியினால் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று உலக மூடர்கள் தினம் என்பதனால் சமூக வலைத்தளங்களில் போலித்தகவல்களை பதிவேற்றுவதை பொது மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இவ்வாறு போலிதகவல்களை வெளியிட்டால் ஐந்து வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என தாய்லாந்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post