17500 ரூபா பெற்று 7 பேரை யாழிற்க்கு கடத்திவந்த கோப்பாய் லொறிக்காரன்!! - Yarl Thinakkural

17500 ரூபா பெற்று 7 பேரை யாழிற்க்கு கடத்திவந்த கோப்பாய் லொறிக்காரன்!!

கோப்பாய் பகுதியில் உள்ள நபர் ஒருவரே கொரோனா அபாய வலயமான கொழும்பில் 7 பேரை பாரவூர்தியில் மறைத்து கொண்டுவந்தமை தெரியவந்துள்ளது.

திருட்டுத்தனமாக குறித்த நபர்களை அழைத்து வருவதற்கு ஒருவரிடம் 2500 ரூபா பணத்தினை பெற்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

இவர்களில் தொல்புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று மாலை இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

மீதி 6 பேரும் யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரியின் நடவடிக்கையில் நள்ளிரவு பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பலாலியில் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
Previous Post Next Post