கொரோனாவா? இன்றும் யாழில் 17 பேருக்கு பரிசோதணை!! - Yarl Thinakkural

கொரோனாவா? இன்றும் யாழில் 17 பேருக்கு பரிசோதணை!!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 17 பேருடைய மாதிரிகள் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கொரோனா மருத்துவ ஆய்வுகூடத்தில் இன்று பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டது.

அந்த பரிசோதணை முடிவில் 17 பேருக்கும் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கொரோனோ வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ் போதனாவில் அனுமதிக்கப்பட்ட 5 பேருக்கும் சாவகச்சேரி சுகாதார சேவைகள் பணிமனைப் பரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 12 பேருக்கும் இன்று கொரோனோ பரிசொதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 17 பேரில் ஒருவருக்கும் கொரோனோ தொற்று இல்லை என பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post