ஜ.டி.எச் வைத்திய சாலையிலிருந்த வெளியேறிய 15 தாதியர்கள்!! - Yarl Thinakkural

ஜ.டி.எச் வைத்திய சாலையிலிருந்த வெளியேறிய 15 தாதியர்கள்!!

கொரொனா வைரஸ் தொற்றாளர்களிற்கு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளித்த தாதியர்களில் ஒரு தொகுதியினர் வெளியேறியுள்ளனர்.

திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களிற்கு கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

நோயாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்து, பிற வைத்தியசாலைகளில் இருந்து தாதியர்கள் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இப்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து 15 தாதியர்கள் கடந்த 14 நாட்களின் முன்னர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

14 நாட்கள் அங்கு கொரோனா தொற்றாளர்களிற்கு சிகிச்சையளித்த பின்னர், அந்த குழு அங்கிருந்து வெளியேறியது.
Previous Post Next Post