15 வயது சிறுமி மீது பாலியல் வன்புணர்வு!! -ஊர்காவற்றுறையில் சம்பவம்- - Yarl Thinakkural

15 வயது சிறுமி மீது பாலியல் வன்புணர்வு!! -ஊர்காவற்றுறையில் சம்பவம்-

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை தெற்கை சேர்ந்த 19 வயது இளைஞனே குறித்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.

குறித்த இளைஞனை ஊர்காவற்றுறை பொலிஸார் வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து கைது செய்து விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post