கொரோனாவா? யாழில் 15 பேருக்கு மருத்துவ பரிசோதணை!! - Yarl Thinakkural

கொரோனாவா? யாழில் 15 பேருக்கு மருத்துவ பரிசோதணை!!

யாழில் இன்று திங்கட்கிழமை 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அவர்களின் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரியாலை மத போதகருடன் தொடர்பில் இருந்த 8 பேர் நாவாந்துறைப் பகுதியில் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதணை செய்யப்பட்டது.

அதே போன்று பருத்தித்துறையை சேர்ந்த ஒருவருக்கும், யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் உள்ள 6 பேருக்கும் இப்பரிசோதணை செய்யப்பட்டது.

இருப்பினும் பரிசோதணை மேற்கொள்ளப்பட்டவர்களில் ஒருவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பணிப்பாளர் மேலும் தகவல் வெளியிட்டார்.
Previous Post Next Post