14 நாள் தனிமைப்படுத்தலின் பின் வீடு திரும்பியவருக்கு கொரோனா!! -அதிர்ச்சியில் சுகாதார துறை- - Yarl Thinakkural

14 நாள் தனிமைப்படுத்தலின் பின் வீடு திரும்பியவருக்கு கொரோனா!! -அதிர்ச்சியில் சுகாதார துறை-

கட்டாய தனிமைப்படுத்தலில் 14 நாட்கள் இருந்து வீடு திரும்பிய நபர் ஒருவருக்கு 10 நாட்களின் பின் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில் இருந்து கடந்த மார்ச் 10ஆம் திகதி நாடு திரும்பிய அவர், 14 நாட்கள் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து கடந்த 24ஆம் திகதி அவர், மத்துகமவிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

வீட்டில் இருந்த அவருக்கு 10 நாட்களின் பின்னர் (நேற்று) உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் அந்த நபர் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு (ஐ.டி.எச்) சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.
Previous Post Next Post