யாழ் தாவடிக்கு 13 ஆம் திகதி விடுதலை!! -வடக்கு சுகாதார பணிப்பாளர் தகவல்- - Yarl Thinakkural

யாழ் தாவடிக்கு 13 ஆம் திகதி விடுதலை!! -வடக்கு சுகாதார பணிப்பாளர் தகவல்-

கொரோனா வைரஸ் அச்சம் தொடர்பில் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள தாவடி பகுதியில் உள்ளவர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விடுவிக்கப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

சற்று முன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவர் வசித்த தாவடி பகுதி முழுமையாக கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, இராணுவம் மற்றும் சுகாதார துறையினருடைய முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

குறித்த பகுதியில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதணைகளின் அடிப்படையிலும், குறிப்பிட்ட நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் எதிவரும் 13 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளனர் என்று அவர் மேலும் தகவல் தெரிவித்தார்.
Previous Post Next Post