யாழில் கொரோனா பரிசோதணை செய்யாமல் 1280 பேர்!! -ஊடரங்கு தளர்வு ஆபத்து: GMOA எச்சரிக்கை- - Yarl Thinakkural

யாழில் கொரோனா பரிசோதணை செய்யாமல் 1280 பேர்!! -ஊடரங்கு தளர்வு ஆபத்து: GMOA எச்சரிக்கை-

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகப்படும் 1280 பேருக்கு இதுவரை பரிசோதணை மேற்கொள்ளாப்படவில்லை.

இந்த நிலையில் ஊடரங்கு உத்தரவை தளர்த்துபது மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று யாழ்.மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேலும் ஒரு வாரத்திற்கேனும் ஊடரங்கு உத்ததரவை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும் என்றும் அச் சங்கம் அவசரமான கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்.மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தனது தாய் சங்கத்திற்கு இன்று அனுப்பிவைத்துள்ள கடித்திலேயே குறித்த எச்சரிக்கை தொடர்பிலும், கோரிக்கை தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் மதகுருவுடன்  இருந்து கொரோனா தொற்றிக்குள்ளாகியதும் அவருடன்  நெருங்கிய தொடர்புகள் கொண்ட 329 பேர்களில் 80க்கு மேற்பட்டோர் இன்னமும் பரிசோதனைக்கு உட்படமல் உள்ளார்கள்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த 1200 க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படாமல் உள்ளார்கள்.

இந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார வைத்தயி அதிகாரிகளின் வலுவான பரிந்துரைகளை மீறியும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவது பொருத்தமானதல்ல என்றும் அக்கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post