யாழில் 12 போருக்கு கொரோனா உறுதி!! -மொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்வு- - Yarl Thinakkural

யாழில் 12 போருக்கு கொரோனா உறுதி!! -மொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்வு-

யாழ்.மாவட்டத்தில் இன்று நடத்த ஆய்வுகூட பரிசோதணையில் 12 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

பலாலி படைமுகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் இருந்தவர்களுக்கு நடத்திய பரிசோதணையில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 15ஆக அதிகரித்துள்ளது.


Previous Post Next Post