யாழில் ஊரடங்க வேளையில் 11 திருட்டு சம்பவங்கள்!! - Yarl Thinakkural

யாழில் ஊரடங்க வேளையில் 11 திருட்டு சம்பவங்கள்!!

யாழ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுழ்ப்படுத்தப்பட்ட கடந்த மாதம் 20 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை 12 திருட்டு சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் 11 திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட 33 இலட்சம் பெறுமதியான  இலத்திரனியல் பொருட்கள் மற்றும் வீட்டு பாவனை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இத்திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம்  நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous Post Next Post